Images
  • siima
    (படம்: Twitter)

நட்சத்திரங்கள் மின்னும் "சைமா" விருது நிகழ்ச்சி

"சைமா" என்று பிரபலமாக அழைக்கப்படும் தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


தமிழில் சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் தெரிவுசெய்யப்பட்டார். 'ரெமோ' படத்திற்காக அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகையாக நயன்தாரா தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இருமுகன்' திரைப்படத்தில் அவரது நடிப்பு விருதினைப் பெற்றுத் தந்தது.


சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த பாடகராக அனிருத், சிறந்த பாடலாசிரியராக மதன் கார்க்கி, சிறந்த வில்லியாக திரிஷா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.


வாழ்நாள் சாதனையாளர் விருது பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்திற்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்கும் வழங்கப்பட்டது.
 

உங்கள் கருத்து

Top