Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

வாலாட்டும் நண்பனுக்கு வகைவகையாக ஐஸ்க்ரீம்

வாலாட்டும் நண்பனுக்கு வகைவகையாக ஐஸ்க்ரீம்

வாசிப்புநேரம் -
வாலாட்டும் நண்பனுக்கு வகைவகையாக ஐஸ்க்ரீம்

(படம்: Reuters)

மனிதர்களின் உற்ற நண்பன் நாய். நமக்காகக் காவல் காக்கும், நம்மிடம் நன்றியுடன் இருக்கும் நாய்களைத் திருப்திப்படுத்த மனிதர்களுக்கும் புதிது புதிதாய் ஏதாவது கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வந்திருக்கிறது நாய் ஐஸ்க்ரீம். அறிமுகமாகியிருக்கிறது மெக்ஸிகோ நகரில்.


(படம்: Reuters)

நாய்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஐஸ்க்ரீம்கள்.

சரி சாதாரண ஐஸ்க்ரீமுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? சாதாராண ஐஸ்க்ரீம்களில் பால் அதிகம்; அது நாய்களுக்கு எளிதில் செரிமானமாகாது.

ஆனால் இந்த வகை ஐஸ்க்ரீம்களில் இயற்கையான தயிரும், குடலுக்கு நன்மையளிக்கும் பாக்டீரியாக்களும் இருப்பதாகக் கூறுகின்றனர், விற்பனையாளர்கள்.


(படம்: Reuters)

புதுப்புது உணவைச் சுவைக்கும் மனிதர்களைப் பார்த்துப் பார்த்து அங்கலாய்க்கும் நாய்களுக்கு இது நிச்சயம் நற்செய்திதான்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்