Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

மாறுகிறதா கமலின் போக்கு?

1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போகிறது. அதிலும் கமல்ஹாசனை ஷங்கர் இயக்குவார் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போகிறது. அதிலும் கமல்ஹாசனை ஷங்கர் இயக்குவார் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதிகச் செலவில் மசாலா படங்கள் எனச் சொல்லப்படும் வர்த்தகப் படங்களை எடுப்பதில் பிரபலமடைந்தவர் ஷங்கர்.

2000ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் படத்திற்குப் பிறகு கமல் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துவந்துள்ளார், சிலவற்றை இயக்கியும் இருக்கிறார்.

இந்தக் காலக்கட்டத்தில் அவரின் பாதிப் படங்கள் மாறுபட்ட முயற்சியைச் சித்திரிப்பவை, எஞ்சியவை நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லலாம்.

மசாலா படங்களில் கமல் நடித்துப் பல காலம் ஆகிவிட்டது. எண்பதுகளில் அவர் நடிப்பில் வெளிவந்த 'சகலகலா வல்லவன்', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'காக்கி சட்டை' ஆகியவை அவற்றில் சில.

'இந்தியன்' படத்தை முழுக்க முழுக்க மசாலா படம் எனச் சொல்லமுடியாது. இருந்தாலும் பெரும்பான்மை மக்களைக் கவரும் அதிரடிக் காட்சிகள், சமுதாய அக்கிரமங்களுக்கு எதிரான போராட்டம் ஆகிய அம்சங்கள் அதில் உண்டு. சிறந்த நடிகருக்கான தேசிய விருதைக் கமலுக்கு வாங்கித் தந்த படம், அதே வேளையில் எத்தகையோரையும் உற்சாகப்படுத்தக்கூடிய வர்த்தகப் படம்.

இப்போது கமல் மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் சேர்கிறார். பொதுவாக ஷங்கரின் படங்களில் வர்த்தகத் தன்மை இல்லாமல் இருக்காது.

அப்படியானால் வர்த்தகப் படங்களை இத்தனை காலம் தவிர்த்துவந்த கமலின் போக்கு மாறிவருகிறதா அல்லது ஷங்கர் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறாரா? விரைவில் தெரிய வரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்