Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்தியாவில் நோன்புப் பெருநாள்

சென்னை, லக்னோ உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்களும் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -

சென்னை, லக்னோ உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்களும் கலந்துகொண்டனர்.

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அய்ஷ்பாக் பள்ளிவாசல். வழக்கத்துக்கு மாறாக அங்கு ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக தொழுகையில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

சென்னையிலும் பெண்களுக்குத் தொழுகையில் ஈடுபட வாய்ப்பு.தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் பலர் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தனர்.நோன்புப் பெருநாள் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

தலைநகர் புதுடில்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கான ஆண் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கொல்கத்தா நகரிலும் ஆயிரக்கணக்கானோர் பாரம்பரிய உடையில் பொது இடத்தில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் பொதுவாக பெருநாள் வருவதற்கு முன் ஒரு மாதத்திற்கு நோன்பைக் கடைப்பிடிப்பர். அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் அன்றாடம் பொழுது புலரும் நேரத்திலிருந்து பொழுது சாயும் வரை உணவோ தண்ணீரோ உட்கொள்ள மாட்டார்கள். உலகின் இரண்டாவது ஆகப் பெரிய முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. அங்கு சுமார் 14 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்