Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விஜய் மால்யா நேரில் வரவேண்டும் - டில்லி நீதிமன்ற உத்தரவு

தொழிலதிபர் விஜய் மால்யா, வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி, நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மால்யா, வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி, நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளிடமிருந்து பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் திரும்பச் செலுத்தாத திரு மால்யா, தற்போது லண்டனில் இருக்கிறார்.

60 வயது மால்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியது அவற்றுள் ஒன்று. அந்த வழக்கை எதிர்கொள்ள அவர் நேரில் வரத் தேவையில்லை என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. சட்ட அமலாக்கச் செயலகம் அதை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீட்டை தற்போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அவரது விமான நிறுவனமான கிங்ஃபிஷர், இந்தியாவின் பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதைத் திரும்பச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்