Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் மீது புதிய வரி விதிக்கவுள்ள கேரள அரசாங்கம்

இந்தியாவின் கேரள மாநில அரசாங்கம், கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களின் மீது புதிய வரி ஒன்றை விதிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் கேரள மாநில அரசாங்கம், கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களின் மீது புதிய வரி ஒன்றை விதிக்கவுள்ளது.

அத்தகைய வரியை நடைமுறைப்படுத்தும் முதல் இந்திய மாநிலம் அது.

நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையைச் சமாளிக்க அந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கேரள நிதி அமைச்சர்  தாமஸ் ஐசக், கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களின் மீது 14.5 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Burger, Pizza, Sandwich மற்றும் விரைவு உணவகங்களில் விற்கப்படும் அனைத்து உணவுப்பொருட்களும் அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார்.

அந்த வரி, மாநில அரசாங்கத்தின் வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தப் புதிய சட்டத்தின் வழி, மக்கள் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்தைக் கைவிடுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்