Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'அணுப்பொருள் விநியோகிப்பாளர் குழுமத்தில் சேர்வதற்கான இந்தியாவின் முயற்சி தொடரும்'

அணுப்பொருள் விநியோகிப்பாளர் குழுமத்தில் சேர்வதற்கான முயற்சியில் வெற்றிபெறாவிட்டாலும் இந்தியா துவண்டுவிடாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

வாசிப்புநேரம் -
'அணுப்பொருள் விநியோகிப்பாளர் குழுமத்தில் சேர்வதற்கான இந்தியாவின் முயற்சி தொடரும்'

இந்திய வெளியுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(Sushma Swaraj)

புதுடில்லி, இந்தியா: அணுப்பொருள் விநியோகிப்பாளர் குழுமத்தில் சேர்வதற்கான முயற்சியில் வெற்றிபெறாவிட்டாலும் இந்தியா துவண்டுவிடாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார். அவ்வாறு சேர்வதற்கான தடைகளைக் களைய சீனாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு நடத்தும் என்றும் அவர் கூறினார்.

48 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழுமத்தில் இந்தியா சேர்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் எப்படி குழுமத்தில் அதைச் சேர்க்க முடியும் என்று சீனா கேள்வி எழுப்பியது.

அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்று திருவாட்டி சுஷ்மா வலியுறுத்தினார். ஆயினும், அணுப்பொருள் விநியோகிப்பாளர் குழுமத்தில் இந்தியா சேர்வதை எதிர்க்கும் சீனாவின் போக்கு காலப்போக்கில் மாறும் சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார். பொருள் சேவை வரி குறித்து காங்கிரஸ் கடந்த 4 நாடாளுமன்ற கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்கள் இறுதிவரை இணங்கமாட்டார்கள் என்று சொல்லிவிடமுடியாது என்றார் திருவாட்டி சுஷ்மா. அவ்வாறே, சீனாவின் நிலைப்பாடு மாறலாம் என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்