Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புதுடில்லி மாணவி மானபங்க வழக்கு - மேல்முறையீட்டு விசாரணை விரைவாக நடக்கிறது

இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் பேருந்தில் மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 4 ஆடவர்கள் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை துரிதமாய் நடத்தப்படவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
புதுடில்லி மாணவி மானபங்க வழக்கு - மேல்முறையீட்டு விசாரணை விரைவாக நடக்கிறது

2012-ஆம் ஆண்டில் புதுடில்லியில் நடந்த பேரணி. (படம்: Reuters)

இந்தியா: இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் பேருந்தில் மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 4 ஆடவர்கள் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை துரிதமாய் நடத்தப்படவிருக்கிறது.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அந்த ஆடவர்கள் அளித்த மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்கவிருக்கிறது.
அவர்கள் புதுடில்லியில் மாணவியை மானபங்கப்படுத்திக் கொன்றனர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இறுதி விசாரணை கடந்த எப்ரல் மாதம் தொடங்கியது. கிட்டத்தட்ட ஈராண்டுக்குப் பிறகு அந்த விசாரணை நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் வழக்கில் குறுக்கிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பெரும்பாலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் வழக்கின் தொடர்பில் நீதிமன்ற நடைமுறைகளில் குறுக்கிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்