Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்தியா சுயமாகத் தயாரித்த முதல் போர் விமானம்

இந்தியா சுயமாகத் தயாரித்த முதல் போர் விமானமான தேஜஸ் நேற்று செயல்படத் தொடங்கியிருக்கிறது. தயாரிப்புப் பணிகள் தொடங்கிய 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விமானம் வான்வெளியில் வலம் வருகிறது.

வாசிப்புநேரம் -

புதுடில்லி: இந்தியா சுயமாகத் தயாரித்த முதல் போர் விமானமான தேஜஸ் நேற்று செயல்படத் தொடங்கியிருக்கிறது. தயாரிப்புப் பணிகள் தொடங்கிய 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விமானம் வான்வெளியில் வலம் வருகிறது.

ரஷ்யா, பிரிட்டன், பிரெஞ்சு விமானங்களை இந்தியா தற்போது அதன் ஆகாயப் படையின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்து வருகிறது. இறக்குமதிகளைக் குறைத்து, உள்ளூர்த் தற்காப்புத் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது இந்தியாவின் நீண்டகால இலக்காக இருந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சொந்தப் போர் விமானத்தை அது
தயாரித்துள்ளது.

தேஜசின் அறிமுகம் நாட்டுக்குப் பெருமை என்று தற்காப்பு அமைச்சர் மனோஹர் பரிக்கர் கூறினார்.

ஒருவர் மட்டும் அமரக்கூடிய அந்தப் போர் விமானம், சீனா, பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய J-17 விமானத்தைவிடச் சிறந்தது எனக் கருதப்படுகிறது. அந்த விமானம் புதிதாகப் பறந்த 3000 மணி நேரத்தில் எந்த விபத்தையும் சந்திக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்