Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் - அதிகாரபூர்வத் தொடக்கம்

இந்தியாவில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய நீர்வளத் துறை அமைச்சர் திருவாட்டி உமா பாரதி ஹரித்வார் நகரில் அதனைத் தொடங்கி வைத்துள்ளார். 

வாசிப்புநேரம் -

இந்தியாவில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய நீர்வளத் துறை அமைச்சர் திருவாட்டி உமா பாரதி ஹரித்வார் நகரில் அதனைத் தொடங்கி வைத்துள்ளார்.

இமயமலையிலுள்ள கங்கோத்ரி என்னுமிடத்தில் உற்பத்தியாகும் கங்கை நதி, சுமார் 250 கிலோமீட்டர் பயணம் செய்து சமவெளியில் பாயத் தொடங்குமிடம் ஹரித்வார். அங்கு 231 துணைத் திட்டங்களை உள்ளடக்கிய "நமாமி கங்கே" என்னும் பெருந்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது கடலில் சங்கமிக்கும் இடம் வரையிலுள்ள 100 இடங்களில், தூய்மைப்படுத்தும் திட்டம் நடைபெறவுள்ளதாகச் சொன்னார் திருவாட்டி உமா பாரதி. கங்கையைத் தூய்மைப்படுத்த இதுவரை, சுமார் 600 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

அந்தப் பணிகளை வீணாக்காமல், மேலும் சுமார் 1040 மில்லியன் டாலர் செலவில் தூய்மைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியாவின் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கவும், பொதுச் சுகாதாரத்தைப் பேணிக்காக்கவும் தூய்மையான கங்கையால் உதவமுடியுமெனத் திரு. மோடி நம்புகிறார். தொழிற்சாலைக் கழிவுகளாலும், அரைகுறையாக எரிக்கப்பட்டு வீசப்படும் மனிதச் சடலங்களாலும் கங்கை பெரிதும் மாசுபட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்