Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பூரி ஜெகந்நாதர் ஆலயத் தேரோட்டம் - மேலும் அதிக பாதுகாப்பு

இந்தியாவில் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத் தேரோட்டத்திற்கான பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கென பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். பூரி ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது.

வாசிப்புநேரம் -

பத்து நாட்கள் நீடிக்கும் அந்த வருடாந்தர சமயத் திருவிழா, நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்களும், பயணிகளும் திரள்வதுண்டு.

சுமார் ஒரு மில்லியன் பேர்வரை பூரியில் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து, மூன்று முக்கியத் தேர்களையும் சுற்றிப் போலீசார் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கியுள்ளனர்.

இருப்பினும் பக்தர்கள், தேரைத் தொட்டுக் கும்பிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேர் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்புப் போலீசார், முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேரோடும் நான்கு முக்கிய வீதிகளோடு, பேருந்து, ரயில் நிலையங்களிலும் கடற்கரையிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மிக அதிகமான அளவில் பக்தர்கள் கூடும் நிகழ்ச்சி என்பதால், கூட்ட நெரிசல் உருவாகாமல் தடுக்கும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுமார் ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பூரி ரதயாத்திரையைக் காண வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். இந்து அல்லாதவர்களுக்கு பூரி ஆலயத்திற்குள் அனுமதியில்லை. ஆகவே, பூரி ஜெகந்நாதரைப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றனர் சில வெளிநாட்டுப் பயணிகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்