Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பயங்கரவாதிகள் குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம்

ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட், குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

வாசிப்புநேரம் -
பயங்கரவாதிகள் குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம்

ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்த ஆண்டில் ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளியானது (ப

ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட், குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் நடக்கும் சாத்தியம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ள பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்த ஆண்டில் ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளியானது. இதுவரை சுமார் 25 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும், இம்முறை பயங்கரவாதிகள் வழக்கமான வழிகளைப் பயன்படுத்தாமல், வேறு பாதைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் மூண்டபோது, காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவப் பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்திய பாதைகளின் வழியாகக் காஷ்மீருக்குள் அவர்கள் ஊடுருவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்