Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அனைத்துலக நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க சீனாவுக்கு இந்தியா அறிவுரை

தென் சீன கடற்பகுதிப் பாதைகள், அமைதி, நிலைத்தன்மை, வளமை ஆகியவற்றுக்கு முக்கியம் என்றும்  இந்தியா தெரிவித்திருக்கிறது. தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனாவுக்கு வரலாற்று ரீதியான உரிமை ஏதுமில்லை என்று அனைத்துலக நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

வாசிப்புநேரம் -
அனைத்துலக நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க சீனாவுக்கு இந்தியா அறிவுரை

தென் சீனக் கடற்பகுதி. (படம்: Reuters)

புதுடில்லி: தென் சீன கடற்பகுதிப் பாதைகள், அமைதி, நிலைத்தன்மை, வளமை ஆகியவற்றுக்கு முக்கியம் என்றும் இந்தியா தெரிவித்திருக்கிறது. தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனாவுக்கு வரலாற்று ரீதியான உரிமை ஏதுமில்லை என்று அனைத்துலக நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை ஏற்று நடக்க இந்தியா, சீனாவிடம் அதிகாரபூர்வ அறிக்கையின்மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

மன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சீனா திண்ணமாகக் கூறியுள்ளது. பிலிப்பீன்சின் வெற்றி, கடற்பகுதி சர்ச்சைகளில் சிக்கியுள்ள சிறிய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று கருதப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்