Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ராம்குமாரை அடையாளப்படுத்தினார் சுவாதியின் தந்தை

சுவாதி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பி. ராம்குமார் கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு, ராம்குமார் கொலை செய்ததாகக் கூறும், 2 சாட்சிகள் முன்வந்திருக்கின்றனர். அவர்களில் சுவாதியின் தந்தையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாசிப்புநேரம் -
ராம்குமாரை அடையாளப்படுத்தினார் சுவாதியின் தந்தை

ராம்குமார். (படம்: PTI)

சென்னை: சுவாதி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பி. ராம்குமார் கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு, ராம்குமார் கொலை செய்ததாகக் கூறும், 2 சாட்சிகள் முன்வந்திருக்கின்றனர். அவர்களில் சுவாதியின் தந்தையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மகள், ராம்குமாரை முன்பே காட்டியதாக சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்தார். 

சிறையில், வரிசையாக நிற்க வைக்கப்பட்ட 10 பேரில் ராம்குமாரை அவ்விருவர் அடையாளப்படுத்தினர். அதற்கு முன்பு ராம்குமாருக்குச் சிறை மருத்துவர்கள் உடல்நல பரிசோதனையை நடத்தினர். 

கைதாவதற்கு முன் ராம்குமார் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்