Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரோமானியர்கள் வர்த்தகம் செய்த இடத்தைக் கண்டுபிடித்த இந்திய அகழ்வாராய்ச்சியாளர்கள்

சென்னையில் அருகே பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகளை தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
ரோமானியர்கள் வர்த்தகம் செய்த இடத்தைக் கண்டுபிடித்த இந்திய அகழ்வாராய்ச்சியாளர்கள்

(நன்றி: தி இந்து)

சென்னை: சென்னையில் அருகே பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகளை தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்திருக்கிறது.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து, இவ்வாண்டு அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. கற்காலம் முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது,
பண்டைக்காலத்தைச் சேர்ந்த இருமுனைக் கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரிகள், சாம்பல் நிற மட்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவை அகழ்வாராய்ச்சியில் முக்கியமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக தமிழகத்தின் உட்பகுதியில் இவ்வாறு மட்பாண்டம் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பழங்காலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்திருக்கக்கூடிய வர்த்தக மையம் என நம்பப்படுகிறது.

தொன்மைக் காலத்திலிருந்து பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட பட்டறைப் பெரும்புதூர் வாயிலாக காஞ்சிபுரத்திலிருந்து வடநாட்டிற்குச் செல்லும் பெருவழி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்