Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காஷ்மீரில் கலவரம் - மூளும் அபாயம்

இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவரை அவருடைய காருடன் சேர்த்து ஒரு கும்பல் ஆற்றில் தள்ளி மூழ்கடித்தது. அதைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில் கலவர மேகம் சூழ்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
காஷ்மீரில் கலவரம் - மூளும் அபாயம்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப் புகை. (படம்: Reuters)

இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவரை அவருடைய காருடன் சேர்த்து ஒரு கும்பல் ஆற்றில் தள்ளி மூழ்கடித்தது. அதைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில் கலவர மேகம் சூழ்ந்துள்ளது.

அண்மையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கிளர்ச்சிக் குழுத் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறையில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.

புர்ஹான் வானியின் இறுதிச்சடங்கு ஸ்ரீநகர் அருகேயுள்ள அவருடைய சொந்த ஊரான டிரால் நகரில் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் தரப்பில் போலீசாரோ, பாதுகாப்புப் படையினரோ இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. புர்ஹான் வானி ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவருடைய இறுதிச் சடங்கில் அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இருப்பினும் இறுதிச் சடங்குக்குப் பிறகு நடந்த வன்முறையில் நகரிலுள்ள பல கட்டடங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகப் போலீசார் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்