Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்திய ராணுவத்தின் தளபதிகளாக பெண்களைத் நியமிப்பதற்கு வரவேற்பு

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் பெண்களைத் தளபதிகளாக நியமிக்கப்படுவதை வரவேற்பதாகத் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் (Manohar Parrikar) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்திய ராணுவத்தின் தளபதிகளாக பெண்களைத் நியமிப்பதற்கு வரவேற்பு

இந்திய ராணுவத்தின் பெண் வீரர்கள். (படம்: Reuters)

இந்தியா: இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் பெண்களைத் தளபதிகளாக நியமிக்கப்படுவதை வரவேற்பதாகத் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் (Manohar Parrikar) கூறியுள்ளார்.

இருப்பினும் மாற்றங்கள் படிப்படியாக நிகழவேண்டும் என்று அவர் கூறினார். Ficci மகளிர் அமைப்பின் மாநாட்டில் அவர் அவ்வாறு கூறினார்.

ராணுவப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை அவர் மறுத்தார்.

எல்லைப்பகுதிகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ராணுவத்தின் முக்கியப்பணி.

அதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றார் அவர். பெண்களால் படைப்பிரிவுக்கு தலைமை தாங்க முடியும்.

முழுப் பெண்கள் பிரிவுகூட அமைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். முப்படைகளுக்கும் தளபதிகளாக பெண்கள் நியமிக்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அமைச்சர் மனோகர் நம்பிக்கை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறின.

சென்ற மாதம் போர் விமானங்களுக்கான விமானிகளாக மூன்று பெண்கள் இந்திய விமானப் படையில் பணி நியமனம் பெற்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்