Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

பெண்கள் அனுபவிக்கும் தொந்தரவைப் புறக்கணிக்கும் பாலிவுட்

இந்திய நடிகை திவ்யா உன்னி பட வாய்புக்காக இயக்குநர் ஒருவரைச் சந்திக்க சென்றிருக்கிறார்.  ஆனால் அவருக்குக் காத்திருந்ததோ எதிர்பாராத அதிர்ச்சி.

வாசிப்புநேரம் -
பெண்கள் அனுபவிக்கும் தொந்தரவைப் புறக்கணிக்கும் பாலிவுட்

படம்: REUTERS/Shailesh Andrade

இந்திய நடிகை திவ்யா உன்னி பட வாய்புக்காக இயக்குநர் ஒருவரைச் சந்திக்க சென்றிருக்கிறார்.ஆனால் அவருக்குக் காத்திருந்ததோ எதிர்பாராத அதிர்ச்சி.

இயக்குநர், திவ்யாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டுள்ளார். இயக்குநரின் பெயரை வெளிப்படுத்த மறுத்தார் திவ்யா. 

ஹாலிவுட் இயக்குநர் ஹார்வி வின்ஸ்டென் (Harvey Weinstein) மீது பாலியல் வன்முறை குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

பெண்கள் அனுபவிக்கும் தொந்தரவைப் பாலிவுட் புறக்கணிப்பதாகப் பலர் நினைக்கின்றனர். ஹாலிவுட்டில் வெளிப்படையாக பேசுவதைப் போல, பாலிவுட்டில் யாரும் பேசுவதில்லை என்று குறை கூறப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பொதுவாக ஆண்களுக்கே அதிகம் மதிப்புக் கொடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்