Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாரடைப்பு, பக்கவாதம் - எந்த இரத்தப் பிரிவினருக்கு அபாயம் அதிகம்?

சில குறிப்பிட்ட வகை இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சில குறிப்பிட்ட வகை இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய இதய அறிவியில் மாநாட்டில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
'O' ரத்தப் பிரிவினரைவிட 'O' அல்லாத பிரிவினருக்கு ( அதாவது 'A', 'B ', 'AB') மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் 9 விழுக்காடு அதிகம் என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

1.3 மில்லியன் பேர் பங்கேற்ற ஆய்வில் இதயக் கோளாறு உட்பட பல்வேறு நோய்க்கூறுகளில் கவனம் செலுத்தப்பட்டது.

'O'அல்லாத பிரிவினருக்கு அந்த அபாயத்தின் காரணம் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

இரத்த உறைவை ஏற்படுத்தும் von Willebrand என்ற புரதம் 'O' அல்லாத பிரிவு இரத்த வகையுள்ளோரிடம் அதிகம் என்பதால் அபாயமும் அதிகம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்