Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அமெரிக்கா: 66 மில்லியன் ஆண்டுப் பழைமையான டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு

எப்போதும் அமைதியாக இருக்கும் தோர்ண்டன் நகரில் எங்கும் இதே பேச்சு.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: 66 மில்லியன் ஆண்டுப் பழைமையான டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு

(படங்கள்: AFP)

கொலராடோ, அமெரிக்கா: எப்போதும் அமைதியாக இருக்கும் தோர்ண்டன் நகரில் எங்கும் இதே பேச்சு.

66 மில்லியன் ஆண்டுப் பழைமையான அரிய டைனோசர் எலும்புகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் தளம் ஒன்றில் நிலத்தைக் தோண்டிக்கொண்டிருந்த ஊழியர்கள், நிலத்தடியில் எலும்பு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் எலும்பைச் சோதித்தபின் அது டைனோசர் எலும்பு என தெரியவந்தது. "டிரைசெரடாப்ஸ்" (Triceratops) எனப்படும் டைனோசர் வகையைச் சேர்ந்தது அது.

இதுவரை டைனோசரின் தந்தங்களும் தோள்பட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எலும்புகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்ட பிறகு அவை பத்திரப்படுத்தப்பட்டு அரும்பொருளகத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்