Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மற்றவர்களுக்குக் கொட்டாவி வந்தால், நாமும் ஏன் கொட்டாவி விடுகிறோம்?

கொட்டாவி ஏன் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது?

வாசிப்புநேரம் -
மற்றவர்களுக்குக் கொட்டாவி வந்தால், நாமும் ஏன் கொட்டாவி விடுகிறோம்?

(படம்: : Reuters/Anuwar Hazarika)

தூக்கம் வந்தால் கொட்டாவி விடுகிறோம், அல்லது அலுப்பாக இருந்தால் கொட்டாவி விடுகிறோம். பக்கத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் கொட்டாவி வருகிறது.

கொட்டாவி ஏன் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது?

நாம் விடும் கொட்டாவி ஏன் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என்று நோட்டிங்ஹேம் பல்கலைகழக ஆய்வாளகள் குழு கண்டுபிடித்துள்ளது.

நமது அசைவுகளைக் கட்டுப்படுத்தும் முளையின் ஒரு பகுதி நாம் கொட்டாவி விடுவதற்குப் பொறுப்பாக உள்ளது. இந்த மூளைப்பகுதி, மற்றவர்களின் சொற்களையும் அசைவுகளையும் பின்பற்றுகிறது. இதனால் மற்றவர்கள் கொட்டாவி விட்டால் நாமும் நமக்குத் தெரியாமலே கொட்டாவி விடுகிறோம்

"Echophenomena" அழைக்கப்படும் இந்தப் பழக்கம் Tourette's நோய், வலிப்பு நோய், தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்களிடையே காணப்படுகிறது.

ஆய்வின் முடிவுகள் இந்த நோய்களைக் குணப்படுத்த உதவும் என்று ஆய்வுக் குழுவினர் நம்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்