Images
  • Tinder

Apple இணையக் கடையின் ஆகப் பிரபலமான Tinder செயலி

Apple நிறுவனத்தின் இணையக் கடையில் Tinder செயலி ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. லாபத்தை ஈட்டும் செயலிகளில் Tinder முதலிடம் வகிப்பதாக விற்பனை ஆய்வு நிறுவனம் App Annie கூறுகிறது.

Netflix, Pandora, Clash Royale ஆகிய பிரபலச் செயலிகளை Tinder முந்திவிட்டது. அது ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.

நண்பர்கள் அல்லது காதலர்கள் அவர்கள் விரும்பும் இணையுடன் சேர்ந்துகொள்ள Tinder உதவுகிறது.

செயலியில் உள்ளவர்களை வலது, இடது புறமாக 'swipe' எனப்படும் விரல் அசைவு முறையில் பயனீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை கணநேரத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

அறிமுகமில்லா நபர்களுடன் பழகும் வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய செயலிகள் பல இருந்தபோதும் Tinder இன் 'swipe' முறை, பயன்படுத்த எளிமையாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது.

பல பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ள Tinder செயலியில் இதுவரை 50 மில்லியன் பேர் இணைந்துள்ளனர்.

உங்கள் கருத்து

Top