Images
  • sc1
    (படங்கள்:  Reuters)

உலகின் ஆக உயரமான மணற்கோட்டை

ஜெர்மனி : உலகின் ஆக உயரமான மணற்கோட்டையைக் கட்ட, 19 சிற்பக் கலைஞர்கள் கொண்ட குழு இணைந்து செயல்பட்டது.

4,000 மெட்ரிக் டன் அளவு மணலைக் கொண்டு அவர்கள் கட்டி முடித்தக் கோட்டையின் உயரம் 17 மீட்டர்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியிலுள்ள துயிஸ்பர்க் நகரில் அந்த மணற்கோட்டையைக் கட்டி முடிக்க கலைஞர்களுக்கு சுமார் 3 வாரமாயிற்று.

எகிப்தின் Great Sphinx, வெனிஸின் Rialto Bridge உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற கட்டட மாதிரிகள் மணற்கோட்டையில் இடம்பெற்றுள்ளன.


இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் கட்டப்பட்ட 14.84 மீட்டர் உயர மணற்கோட்டை இதுவரையில் ஆக உயரமான மணற்கோட்டை என்ற பெருமையைப் பெற்றிருந்தது.


அந்தச் சாதனையை முறியடித்துள்ளது ஜெர்மனியின் புதிய மணற்கோட்டை. 

உங்கள் கருத்து

Top