Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதுடில்லி: ஆடவர் வயிற்றில் ஓட்டை

மதுபானக்கூடங்களுக்குச் செல்வோர் பலருக்கு, பணப்பையில் ஓட்டை ஏற்படும். ஆனால், டில்லியில் 30 வயது ஆடவர் ஒருவருக்கு ஓட்டை ஏற்பட்டது அவரது வயிற்றில்!

வாசிப்புநேரம் -

மதுபானக்கூடங்களுக்குச் செல்வோர் பலருக்கு, பணப்பையில் ஓட்டை ஏற்படும். ஆனால், டில்லியில் 30 வயது ஆடவர் ஒருவருக்கு ஓட்டை ஏற்பட்டது அவரது வயிற்றில்!

நைட்ரஜன் திரவத்தைக் குடித்ததால் ஏற்பட்ட வினை அது. அத்தகைய பானத்திலிருந்து புகை முழுமையாக வெளியான பிறகே அதனை உட்கொள்ள வேண்டும் . அது தெரியாமல் ஆடவர் ஒருவர்,

ஆர்வக்கோளாற்றால் அவசரமாக அதை வாயில் ஊற்றிக்கொண்டுவிட்டார்.
கடும் வலி, வயிற்றில் வீக்கம், மூச்சுத் திணறல் ....படாதபாடு பட்டுப்போனார்.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வயிற்றில் பெரும் ஓட்டை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

நைட்ரஜன் திரவம் உணவு, பானங்களை உடனடியாக உறையவைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்