Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நினைத்துப் பார்த்திராத உணவுகளிலும் நிறைந்திருக்கும் சர்க்கரை

அளவுக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்வது உடலுக்குக் கேடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இனிப்புப் பதார்த்தங்களில் மட்டும்தான் அதிகளவு சர்க்கரை உள்ளது என்பதில்லை.

வாசிப்புநேரம் -

அளவுக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்வது உடலுக்குக் கேடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இனிப்புப் பதார்த்தங்களில் மட்டும்தான் அதிகளவு சர்க்கரை உள்ளது என்பதில்லை.

நாம் நினைத்துக் கூட பார்த்திராத பலவகை உணவுகளில் சர்க்கரை உள்ளது.

'மக்கனி' குழம்பு

வெண்ணெய், சர்க்கரை, பால் ஆகியவற்றைக் கொண்ட 'மக்கனி' குழம்பில் பயனற்ற கேலரிகள் ஏராளம். நல்ல ருசி.

ஆனால் எடையைக் குறைக்க விரும்புவோர் அதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

சுவை கொண்ட தயிர்

தயிர் உடலுக்கு நல்லது. ஆனால் அதில் இனிப்பு சுவையைச் சேர்ப்பதற்கான செயற்கைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சிலவகை பிஸ்கெட்டுகளில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, கொழுப்பு ஆகியவை உள்ளன.

ப்ரோட்டின் பார்ஸ்

புரதச் சத்து நிறைந்ததாகக் கூறப்படும் இந்த உணவில் சர்க்கரை அதிகளவு உள்ளது.

கேன் பழச்சாறு

கேன்களில் அடைத்துவைக்கப்படும் பழச்சாறுகளில் சர்க்கரை அதிகம்.

கெட்ச்சப்

கெட்ச்சப்களில் தக்காளிச்சாற்றில் சர்க்கரை அதிகம்.அதில் சர்க்கரை மிகுதியாக இருப்பதால் எடையைக் குறைக்க விரும்புவோர் அதைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்