Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாலுக்குப் பதிலாக தண்ணீர்

பொதுவாக 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 800 mg கால்சியத்தை உட்கொள்ளவேண்டுமாம்.

வாசிப்புநேரம் -

பொதுவாக 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 800 mg கால்சியத்தை உட்கொள்ளவேண்டுமாம்.

51 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அது 1000 mg.

கால்சியம் நிறைந்த உணவுகளில் ஒன்று, பால்.

ஆனால் அதற்குப் பதிலாக கால்சியம் நிறைந்த ஊற்றுநீரை அருந்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் 300 mg கால்சியம் கொண்ட 5 வெவ்வேறான பொருட்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொன்றிலும் இருந்த கால்சியம் அளவுகளை உடம்பு ஏற்றுக்கொண்ட விதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கண்டறிப்பட்டது.

தண்ணீரில் இருந்த மற்ற ஊட்டச்சத்துகள் கால்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்தை மாற்றவில்லை.

பால் பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம். இனி, தண்ணீர் அருந்துங்கள்!
தொடர்புடையவை: உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்கள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்