Images
  • expensive food
    படம்: REUTERS/Chip East

மலைக்கவும் மயங்கவும் வைக்கும் உணவு விலைகள்

கண், மூக்கு, நா ஆகியவற்றை ஒருசேரச் சுண்டியிழுக்கும், அரசபோக உணவுகளுக்காகப் பணத்தை வாரி இறைப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர்.

பலரின் மாதச் சம்பளங்களுக்கு நிகராக உள்ள இந்தப் பதார்த்தங்களின் விலைகள் அதற்குச் சான்று:

'லாப்ஸ்டர் ஆம்லட்'

'ஆம்லட்' சாப்பிட ஆசை வந்துவிட்டால் வீட்டிலும் வழக்கமான உணவகங்களிலும் கேட்டுப் பெறலாம். 'லாப்ஸ்டர்' சாப்பிடுவது பலருக்கு அவ்வளவு சாதாரணமல்ல. அவற்றுடன் Sevruga caviar என்ற உணவுப் பொருள் சேர்ந்தால், விலை 1,000 டாலர் (கிட்டத்தட்ட 1,357 வெள்ளி)!

நியூயார்க்கிலுள்ள Le Parker Meridien ஹோட்டலில் அந்த உணவு விற்பனைக்குக் கிடைக்கும்.

'சமுண்டாரி கஸானா கறி'

இது இந்திய உணவு. ஸ்காட்லந்தைச் சேர்ந்த லாப்ஸ்டர்கள், ஃபிரான்ஸைச் சேர்ந்த நண்டு, அரிய வகைக் காளான்கள், காடை முட்டைகள் அனைத்திலும் தங்கம் பூசப்பட்டு பரிமாறப்படுகிறது.

கண்களையும் நாவையும் கொஞ்சிக் கிள்ளும் அளவுக்குச் சுவை, அழகு கொண்ட பதார்த்தம்... விலை $4,342

இந்தியாவின் Bombay Brassiere உணவகம் விற்கிறது இதனை..

'பிட்ரா ராயேல் 007'

ஜேம்ஸ் பாண்ட் படத்தலைப்பு ஒன்றைத் தழுவிக்கொண்ட இந்தப் பதார்த்தத்தின் பெயர்.

Domenico Crolla என்ற பிரபல ஸ்காட்லந்துச் சமையல் வல்லுநர் இதனைத் தயாரித்திருக்கிறார்.

12 அங்குல நீளம் கொண்டுள்ள அந்தப் பீட்ஸாவில் லாப்ஸ்டர், கேவியார், சால்மன் மீன்கள், முதிர்ச்சியடைந்த பழரசங்கள் உள்ளிட்டப் பொருட்கள் இந்த பதார்த்தத்தில் உள்ளது.

24 காரட் தங்கத்துளிகள் பீட்ஸாவில்..அங்கும் இங்கும்..

‘டென்சுக்கே கருப்புத் தண்ணீர்ப்பழம்’

விலை 6,000 டாலர். வாயைப் பிளக்காதீர். நீங்கள் படித்தது சரிதான். ஜப்பானின் ஹொக்கைடோவில் மட்டும் உள்ளது. அறுவடைக் காலத்தில் பத்து, பன்னிரண்டு பழங்கள்தான் கனியும். முறுக்குடன் கூடிய தித்திப்பு இந்தப் பழத்தின் சிறப்பு என்கின்றனர் அதனைச் சுவைத்தவர்கள்.

'அல்மாஸ் கேவியார்'

24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட குவளையில் உள்ளது இந்தக் கேவியார். ஈரானில் தயாரிக்கப்படும் மிக அரிய உணவுப் பொருளான இதன் விலை 25,000 டாலர்.

இதுவரை லண்டனின் பிக்காடிலி வட்டாரத்தில் உள்ள Caviar House & Prunier என்ற கடை மட்டுமே இந்த உணவை விற்பதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்து

Top