Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீரிழிவு நோயாளியின் மூளையை அதிகமாக பாதிக்கும் உடற்பருமன்

நீரிழிவு நோய் மூளைக்குக் கேடு விளைவிக்கக்கூடும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாம்.

வாசிப்புநேரம் -

நீரிழிவு நோய் மூளைக்குக் கேடு விளைவிக்கக்கூடும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாம்.

சாதாரண எடை கொண்ட நீரிழிவு நோயாளிகளைவிட பருமனாக உள்ளோரின் மூளை அதிகளவில் மோசமடைந்துவருவதாய் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரண எடை கொண்ட 50 நீரிழிவு நோயாளிகளையும் உடற்பருமன் அதிகமுள்ள 50 நீரிழிவு நோயாளிகளையும் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் மூளை பாதிப்பு விரைவில் ஏற்படுவதில்லை என்றும் ஆய்வு கூறியது.

இனிப்பு சேர்க்கும் ரசாயனங்கள் கொண்ட 'டையட் சோடா' பானங்களைக் குடிப்போருக்குப் பக்கவாதம், முதுமையில் உண்டாகும் மறதி நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்