Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஜப்பானில் வித்தியாசமான பல சுவைகளில் தயாரிக்கப்படும் கிட்கேட்

உலகமெங்கிலும் கிட்கேட் (KitKat) சாக்லெட்டைச் சுவைப்பவர்கள் பலர். கிட்கேட்டிற்கு ஜப்பான் மிகப் பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது. அங்கு 300 வெவ்வேறு வித்தியாசமான சுவைகளிலும் கிட்கேட் விற்கப்படுகின்றன. 

வாசிப்புநேரம் -
ஜப்பானில் வித்தியாசமான பல சுவைகளில் தயாரிக்கப்படும் கிட்கேட்

படம்: AFP/ Behrouz Mehri

உலகமெங்கிலும் கிட்கேட் (KitKat) சாக்லெட்டைச் சுவைப்பவர்கள் பலர். கிட்கேட்டிற்கு ஜப்பான் மிகப் பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது. அங்கு 300 வெவ்வேறு வித்தியாசமான சுவைகளிலும் கிட்கேட் விற்கப்படுகின்றன.

தோக்கியோவின் கிழக்குப் பகுதிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காசிமுகாவுரா (Kasumigaura) பகுதியில் கிட்கேட் தொழிற்சாலை அமைந்துள்ளது.

படம்: AFP/ Behrouz Mehri

அங்கு தினந்தோறும் 4 மில்லியன் கிட்கேட் துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.  ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வோர் அங்கு பல்வேறு சுவைகளில் விற்கப்படும் கிட்கேட் சாக்லெட்டுகளை அள்ளிச் செல்வதை விரும்புவதுண்டு.

பிரிட்டனில் 1935ஆம் ஆண்டிலிருந்தே கிட்கேட் இருந்து வருகிறது. ஆனால் ஜப்பானில் 1973ஆம் ஆண்டில் தான் அறிமுகமானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்