Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சைவ விரும்பிகளுக்கான புரதச் சத்து நிறைந்த உணவுகள்

நம்முடைய உடலின் அன்றாட செயல்பாட்டுக்கு, தசை வளர்ச்சி, உருவாக்கம் போன்றவற்றுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.

வாசிப்புநேரம் -
சைவ விரும்பிகளுக்கான புரதச் சத்து நிறைந்த உணவுகள்

(படம்: ராய்ட்டர்ஸ்)

நம்முடைய உடலின் அன்றாட செயல்பாட்டுக்கு, தசை வளர்ச்சி, உருவாக்கம் போன்றவற்றுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.

இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை உண்ணுபவர்களுக்கு புரதச்சத்து கிடைக்கிறது.

ஆனால், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அதே அளவு புரதச்சத்து கிடைக்கிறதா என பலர் கேட்கலாம்.

அசைவம் மூலமாகக் கிடைக்கும் புரதத்துக்கு இணையாக, புரதம் நிறைந்த சைவ உணவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அவை என்னென்ன?

1.) பயறு

பயறு வகைகளில் புரதமும் நார்ச் சத்து நிறைந்துள்ளன.


2.) காய்கறிகள்.

பீன்ஸ், கேல், பசலைக் கீரை, புரோக்கலி கீரை வகைகளிலும் அதிக புரதச் சத்து உள்ளது.


3.) பூசணிக்காய் விதைகள்
பூசணிக்காய் விதைகளில் இரும்புச் சத்தும், புரதச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளன.


4.) சோயா பால்

சைவம் சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு சோயா பால். ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரதச் சத்தும் 4 கிராம் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் உள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்