Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எது '5G' தொலைபேசி? தரநிலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வெளிநாடுகளில், தொலைபேசிச் சேவை நிறுவனங்கள் சில, புதிய '5G'   சேவையை வழங்குவதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

வாசிப்புநேரம் -

வெளிநாடுகளில், தொலைபேசிச் சேவை நிறுவனங்கள் சில, புதிய '5G' சேவையை வழங்குவதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.
ஆனால் அது பொய்.

4G தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வடிவத்தையே, 5G என விளம்பரங்கள் பல பொய்யாகக் கூறுகின்றன.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகத் தொலைத்தொடர்புச் சங்கம் தலையிட்டு அந்த சர்ச்சையில் சில அம்சங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு Gக்கும் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கவேண்டும் என்று சில நிபந்தனைகள் உண்டு.
அவற்றை, கைபேசி தயாரிப்பு நிறுவனம், தொலைத் தொடர்புச் சேவை நிறுவனம், கைபேசிக் கோபுர நிறுவனம் உள்ளிட்ட எல்லாத் தரப்புகளும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

இந்த நிலையில், 5G என்பது என்ன? அதற்குரிய தெளிவான வரையறை ஏதுமில்லை இப்போதைக்கு.
ஆயினும், அனைத்துலகத் தொலைத்தொடர்புச் சங்கம் சில அம்சங்களைப் பட்டியலிடுகிறது.

1. பேசிக் கொண்டிருக்கும்போது இணைப்பு துண்டிக்கப்படக் கூடாது. இதுதான் மிக முக்கியமான நிபந்தனை.

சிங்கப்பூரில் இது அரிது என்றபோதும், வளரும் நாடுகளில், இந்தப் பிரச்சினை அதிகம்.

2. கைபேசி மின்கலன் சக்தி விரைவில் குறைவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பம் 5G தொழில்நுட்பத்தில் இருக்கவேண்டும்.

3. மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும், அலைபேசிக் கோபுரங்களுக்கு இடையிலான மாற்றம், சுமுகமாக நிகழ வேண்டும்.

4. அதிவிரைவான தரவிறக்கம்... விநாடிக்கு 100 மெகாபைட்ஸ் வேகத்தில் பதிவிறக்கம் நிகழ வேண்டும். விநாடிக்கு 50 Mb வேகத்தில் பதிவேற்றம் சாத்தியமாக வேண்டும்.

5. HD எனப்படும் நுண்தெளிவுத் தொழில்நுட்பத்தில் அமைந்த ஒரு மணி நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சுமார் 4 நிமிடங்களில் பதிவிறக்கம் ஆகவேண்டும்.
பயனீட்டாளரின் கைகளுக்கு 2020க்குள் 5G சேவை கிடைக்குமென
எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்