Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டுக்குத் திரும்பியதும் உடனடியாகப் படுக்கையில் உட்கார வேண்டாம்

வெளியில் அலைந்து திரிந்து வீட்டுக்குத் திரும்பும் போது நீங்கள் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கலாம். 

வாசிப்புநேரம் -
வீட்டுக்குத் திரும்பியதும் உடனடியாகப் படுக்கையில் உட்கார வேண்டாம்

(படம்: AFP)

வெளியில் அலைந்து திரிந்து வீட்டுக்குத் திரும்பும் போது நீங்கள் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கலாம். களைப்பில் அப்படியே படுக்கையில் படுத்து இளைப்பாரலாம். அவ்வாறு செய்வதால் பல சுகாதாரக் கேடுகள் வரக்கூடும்.

ஒவ்வொரு நாளும் நாம் சுமார் 500 மில்லியன் அணுக்களை இழக்கிறோம்.

மனிதர்களுக்கு சராசரியாக நாள்தோறும் ஒரு லிட்டர் வியர்வை சுரக்கிறது.

அதனால், நமது தோலில் உள்ள அழுக்கு கிருமிகளின் புகலிடமாகும்.

நமது சருமத்தில் கிருமிகள், மாதக் கணக்கில் குடிகொண்டு குடும்பம் நடத்த முடியும்.

அழுக்குடன் நாம் படுக்கையில் படுப்பதால் கிருமிகள் அங்கு சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றன. ஆனால் அவற்றை நாம் அறிய முடியாது. அவை நம்மோடு ஒட்டியிருந்து நமக்குத் தொல்லை கொடுக்கும்.

வெளியில் செல்லும்போது அணிந்திருந்த ஆடைகளுடன் சிலர் தூங்கச் செல்வதுண்டு. இதனால் கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.

உடைகளில் உள்ள அழுக்கும் கிருமிகளும் பருக்களை உண்டாக்குகின்றன. அழுக்கு, சருமத்தின் ரோமக் கால்களை அடைத்துக்கொள்வதால் பருக்கள் ஏற்படகின்றன.

கேட்கவே சற்று அருவருப்பாக உள்ளதா?

இனிமேல் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வந்ததும் முதல் வேலை கை, கால்களை நன்றாகக் கழுவுவதாக இருக்கட்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்