Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாதங்களின் துர்நாற்றத்தைக் கண்டறியும் இயந்திர நாய்க்குட்டி

உங்கள் பாதங்களிலிருந்து துர்நாற்றம் வருகிறதா இல்லையா என கண்டுபிடுக்க இயந்திர நாய்க்குட்டி அறிமுகமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பாதங்களின் துர்நாற்றத்தைக் கண்டறியும் இயந்திர நாய்க்குட்டி

(படம்: AFP)

உங்கள் பாதங்களிலிருந்து துர்நாற்றம் வருகிறதா இல்லையா என கண்டுபிடுக்க இயந்திர நாய்க்குட்டி அறிமுகமாகியுள்ளது.

துர்நாற்றம் மிகச் சங்கடமானது. மற்றவர்களிடம் அதைச் சுட்டிக்காட்ட நம்மில் பலர் கூச்சப்படுவோம். இந்தச் சங்கடத்தை அகற்ற முனைகிறது ஜப்பானின் இயந்திர நாய்க்குட்டி 'ஹானா-சான்'.

15 செண்டிமீட்டர் மட்டுமே உள்ள அது உண்மையான நாய்க்குட்டி போல இருக்கும். அதன் மூக்குப் பகுதியில் உள்ள உணர்கருவிகள் துர்நாற்றத்தைக் கண்டறியும்.

பாதங்களில் துர்வாடை வந்தால் அது குரைக்கும், தாங்க முடியாத அளவு இருந்தால் மண்டியிட்டு மயங்குவது போல நடிக்கும்.

துர்நாற்றத்தைக் கண்டறியும் இயந்திர நாய்க்குட்டி, தேவைப்படும்போது வாசனைத் திரவியத்தைத் தெளிக்கும்.

தமது மகள் பாதங்களில் துர்நாற்றம் வருகிறது என்று கூறியதால், அதன் அளவைத் தெரிந்துகொள்ள இயந்திர நாய்க்குட்டியை உருவாக்கினார் கிமிக்கா சுஜி (Kimika Tsuji).

ஜப்பானில் துர்நாற்றத்தை உணரும் கருவிகள் பிரபலமடைந்து வருகின்றன.

ஜூலை மாதம் இது போன்ற மற்றொரு கருவி அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய இயந்திர நாய்க்குட்டி 'ஹானா-சான்'
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்.

அது உங்கள் பாதங்களை நுகர்ந்து பரிகாரம் சொல்லும் செல்ல இயந்திர நாயின் விலை சுமார் 10,000 டாலர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்