Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கார் வாங்கப் போகிறீர்களா?

அண்மையில் சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் ஏழாண்டு காணாத சரிவைக் கண்டது. அதனைத் தொடர்ந்து பலர் கார் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கார் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதா?  

வாசிப்புநேரம் -

அண்மையில் சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் ஏழாண்டு காணாத சரிவைக் கண்டது.

அதனைத் தொடர்ந்து பலர் கார் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கார் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதா? 

கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு பின்னர் முடிவெடுங்கள் என்கின்றனர் சந்தை கவனிப்பாளர்கள்.

  • அவசியமா?

முதலில் கார் அவசியமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள்.
வாடகைக் கார்களை எடுக்க பல்வேறு வசதிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

  • தியாகம் செய்யத் தயாரா? 

காரை வாங்கிவிட்டால், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சிலவற்றைத் தியாகம் செய்யவேண்டிவரும். அதற்குத் தயாராய் இருங்கள்.

  • நிதிச் சுமை

கார் கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தும். அதைச் சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் மனதைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

  • கட்டுப்படியான கார் எது?

முதலில் உங்கள் மாதாந்தரச் செலவைக் கணக்கிட்டு, உங்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய கார் எவை என்பதை முடிவு செய்யுங்கள்.

  • ஒப்பிட்டுப் பாருங்கள்

பெரும்பாலான கார் விற்பனையாளர்கள், காருக்கான கடனைத் தங்கள் மூலமே பெறுமாறு வலியுறுத்துவர். அதில் அவர்களுக்குக் கணிசமான லாபம் உண்டு என்பது நமக்குத் தெரியும். அப்படிப் பெறாவிட்டால், கூடுதல் கட்டணம் விதிக்கும் விற்பனையாளர்களும் உள்ளனர். எனவே, அவர்களிடமிருந்து கடன் பெற்றால் செலுத்தவேண்டிய தொகையையும், வெளியில் கடன் வாங்கினால் செலுத்தவேண்டிய தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்து, பின் முடிவு செய்யவேண்டும்.

  • வட்டியைக் குறைக்க முடியுமா?

முடிந்த வரை குறைவான காலத்துக்குக் கடன்பெற்று, குறைவான வட்டி செலுத்தும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • மறைந்திருக்கும் அம்சங்கள்கள்

கடனை முன்கூட்டியே அடைத்துவிட்டால், ஏதாவது தொகை செலுத்த வேண்டிவருமா? செயல்முறைகளுக்கெனத் தனிக் கட்டணம் உள்ளதா? போன்ற கேள்விகளை முன்வையுங்கள். 

  • கலந்தாலோசனை

கார் வைத்திருக்கும் நண்பர்களுடன் கலந்துபேசுங்கள். தகவல் பரிமாற்றத்தில் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்