Images
  • Sleep
    படம்: Channel NewsAsia/ Lars Leetaru © 2017 The New York Times

விடுதிகளில் நன்றாக உறங்குவது எப்படி?

விடுதிகளில் தங்கும்போது,நித்திரை கொள்வதில்  பலருக்குச் சிரமம் இருக்கலாம். பல நாடுகளுக்குப் பயணம் செய்யும் சுற்றுப்பயணிகள் எவ்வாறு ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

சில குறிப்புகள்:

அடிக்கடி விடுதிகளை மாற்ற வேண்டாம்

விடுதிகள் பொதுவாக ஒரே வகையான அறைகலன்களேயே புழககத்தில் வைத்திருக்கும். உதாரணத்திற்கு Hyatt விடுதியில் பயன்படுத்தும் மெத்தை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வழங்கினால், அதே விடுதியை அடுத்த முறையும் தெரிவு செய்யுங்கள். புது மெத்தைக்கு உடல் பழக்கமாக சிறிது காலம் எடுக்கலாம்.

முன்பதிவு செய்யும் முன்னர் கேளுங்கள்

விடுதிக்கு முன்பதிவு செய்யும் முன்னர், அங்கு பயன்படுத்தப்படும் மெத்தையின் தரம், அது எதைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பது பற்றி விசாரியுங்கள்.

உகந்த சூழலை உருவாக்குங்கள்

அமைதி, குளிர்ச்சி, மெல்லிய இருட்டு ஆகிய அம்சங்கள் கொண்ட அறை, உறங்குவதற்கு உகந்ததாக இருக்கும். அறையின் தட்பவெப்ப நிலை 18°Cக்கும் 19°Cக்கும் இடைப்பட்டிருக்க வேண்டும்.

உறங்குவதற்கு முன்னர் நன்றாக இளைப்பாறுங்கள்

நன்றாக இளைப்பாறிய பிறகு பின்னர் மெத்தையில் உறக்க செல்லுங்கள். தொலைக்காட்சி காண்பது, மின்னஞ்சல் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்.

 


உங்கள் கருத்து

Top