Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிள்ளைகளுக்கு இடையில் பிரபலமடைந்துவரும் செயலிகள்

சமூக ஊடகச் செயலிகள் அனைத்துத் தரப்பினரிடையே பிரபலமாக உள்ளன.

வாசிப்புநேரம் -

சமூக ஊடகச் செயலிகள் அனைத்துத் தரப்பினரிடையேயும் பிரபலமாக உள்ளன.
ஆயினும் அவற்றின் நுணுக்கங்களை விரல்நுனியில் தெரிந்துகொண்ட தலைமுறையினர் பதின்ம வயதினரே. பெரியவர்கள் பலர் ஃபேஸ்புக் மட்டுமே வைத்திருப்பர். அதிகபட்சமாக அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் இருக்கலாம். பதின்ம வயதினர் பயன்படுத்தும் செயலிகளோ பல்வேறு.
அந்தச் செயலிகளில் சில:

Marco Polo: சின்னஞ்சிறு காணொளிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது இச்செயலி. பயனீட்டாளர்கள் தங்களையே காணொளி எடுத்துக்கொண்டு அந்தச் செயலியுடன் இணைந்திருக்கும் தங்களது நண்பருக்கு அனுப்பலாம்.

Yellow:  இந்தச் செயலி, பதின்ம வயதினர்களுக்கான Tinder செயலி எனப் பிரபலமாகக் கருதப்பட்டு வருகிறது. புதிய நண்பர்களுடன் இணைவதற்கான தளமாக இது உள்ளது. செயலியில் உள்ளவர்களை வலது, இடது புறமாக 'swipe' எனப்படும் விரல் அசைவு முறையில் பயனீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களைக் கணநேரத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

Sarahah: சொந்த அடையாளத்தை வெளியிடாமல் தெரிந்தவருக்குக் குறுந்தகவல்களை அனுப்பலாம். மறைவிலிருந்து பலர் தங்களது ஆசைகளையும் கோபங்களையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் தளமாக அது உள்ளது.

சமூக ஊடக உலகத்தினுள் பதின்ம வயதினர் இப்போது முழுமையாக நுழையத் தொடங்கியிருக்கின்றனர். புதிய செயலிகளின் பாதிப்பை அளந்து ஆராய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். எந்த ஊடகத்தை எப்போது பயன்படுத்தினாலும் கவனமும் நிதானமும் தேவை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்