Images
  • 110917 cars

கார்கள் - தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

சிங்கப்பூரில் கார் விலைகள் அதிகம் என்பது நமக்குத் தெரியும். அண்மையில் சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் ஏழாண்டு காணாத சரிவைக் கண்டது.

அதனைத் தொடர்ந்து பலர் கார் வாங்க ஆர்வமாக உள்ளனர். 

கார் தொடர்பான சில தகவல்கள் இதோ உங்களுக்காக:

  •  சுமார் 504,000 - சென்ற ஆண்டு பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை (தகவல்: நிலப் போக்குவரத்து ஆணையம்).
  • சுமார் 245,000 - கடந்த ஆண்டு கார்களுக்காகக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை (தகவல்: சிங்கப்பூர் கடன் தகுதி நிர்ணயப் பிரிவு)
  • 70% - காரின் சந்தை மதிப்பு (Open Market Value) 20,000 வெள்ளிக்குக் குறைவாக இருந்தால், பெறக்கூடிய கடன்.
  •  60% - காரின் சந்தை மதிப்பு (Open Market Value) 20,000 வெள்ளிக்குக் கூடுதலாக இருந்தால், பெறக்கூடிய கடன்.
  •  2.7 - 3.0% - காருக்கான கடனுக்குத் தகுதி பெற்றால், செலுத்தவேண்டிய வட்டி
  •  சுமார் 2.1% - திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டித்து மறுகடன் (Refinancing)பெற்றால் செலுத்தவேண்டிய வட்டி

 

(தகவல்கள் : Today Online)

உங்கள் கருத்து

Top