உடல் எடை அதிகரிப்பதற்கும் உணவை உண்பதற்கு முன் அதை மோந்து பார்ப்பதற்கும் தொடர்பு
உடல் எடை அதிகரிப்பதற்கும் உணவை உண்பதற்கு முன் அதை மோந்து பார்ப்பதற்கும் தொடர்பு இருப்பதாகப் புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை அதிகரிப்பதற்கும் உணவை உண்பதற்கு முன் அதை மோந்து பார்ப்பதற்கும் தொடர்பு இருப்பதாகப் புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், உடல் எவ்வாறு கலோரிகளைச் செரிமானம் செய்கிறது என்பதில் உணவின் வாசம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆய்வின்போது, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குண்டாக உள்ள எலிகளின் மோந்து பார்க்கும் சக்தியை மரபணுச் சிகிச்சையைக் கொண்டு அகற்றினர்.
உணவை மோந்து பார்த்த எலிகளுடன் ஒப்பிடுகையில் மோந்து பார்க்காத எலிகள் உடல் எடையைக் குறைத்துள்ளன.
ஆனால், மோந்து பார்க்க முடியாத ஒல்லியான எலிகளும் அதே அளவிலான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்கின்றன.
உணவை மோந்து பார்த்த எலிகளின் உடல் எடை இருமடங்கு அதிகரித்தது தெரியவந்துள்ளது.