கழிப்பறையா? புலன்களுக்கு விருந்தா?
இதமான செவ்விசை. கண்கவர் ஓவியம். நறுமண மலர்க்கொத்தைக் கொண்ட பூச்செடி.
நியூயார்க்: இதமான செவ்விசை. கண்கவர் ஓவியம். நறுமண மலர்க்கொத்தைக் கொண்ட பூச்செடி.
நியூயார்க்கின் சொகுசுக் கழிப்பறைகள் 254,000 டாலர் செலவில் மேம்படுத்தப்படுகின்றன. அங்கு செல்ல அனுமதி இலவசம்.
நியூயார்க்கில் 5-ஆம் அவென்யூவிலுள்ள பொது நூலகத்திற்குப் பின்னால் உள்ள Beaux Arts கட்டடத்தில் கழிப்பறைகள் உள்ளன.
அங்கு ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட பீங்கான் தரைக்கற்கள்..கையசைத்தாலே பிளாஸ்டிக் கழிப்பறை இருக்கைகள் அசையும். குளிர் சாதனப்பெட்டியும் உண்டு.
அழுக்கான கழிப்பறைகளுக்கு எதிர்மறையாக உள்ள சொகுசுக் கழிப்பறையை இயக்குவதற்கான வருடாந்திரச் செல்வு, 271,000 டாலர்!