Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உட்கார்ந்தே இருந்தால் மரணம் சீக்கிரம் வருமா?

அதிகம் நடமாடுபவர்களை விட உட்கார்ந்தே இருப்பவர்கள் அகால மரணம் அடையும் வாய்ப்பு அதிகம் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஒருவர் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அவர் அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் அவர் சீக்கிரமாக உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.

வாசிப்புநேரம் -
உட்கார்ந்தே இருந்தால் மரணம் சீக்கிரம் வருமா?

கோப்புப் படம்: Xabryna Kek

அமெரிக்கா: அதிகம் நடமாடுபவர்களை விட உட்கார்ந்தே இருப்பவர்கள் அகால மரணம் அடையும் வாய்ப்பு அதிகம் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஒருவர் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அவர் அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் அவர் சீக்கிரமாக உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடமாடுவது, அகால மரணம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீண்ட ஆயுளுக்கு உடற்பயிற்சியுடன் துடிப்பான வாழ்க்கைமுறையும் மிக அவசியம் என்பதை ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.

ஆய்வில் கலந்துகொண்டவர்களில்14 விழுக்காட்டினர் 90 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களில் 340 பேர் நான்காண்டு காலத்தில் மாண்டனர்.

ஆய்வுக் காலத்தின் போது, அதிகம் நடமாடுபவர்களுடன் ஒப்பிடுகையில் உட்கார்ந்தே இருப்பவர்கள் அகால மரணமடையும் வாய்ப்பு இரட்டிப்பாக இருப்பது தெரியவந்தது.

அதிக நடமாட்டம் இல்லாததால், உடலில் சர்க்கரை சரியாகச் செரிமானமாவதில்லை. இதனால், நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.

இதனால், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நடக்கச் செல்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்