Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமூக ஊடகங்களைப் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டியவை

நம்மில் பலர் சமூக ஊடகங்கங்களில் அதிக நேரம் செலவிடும் இக்காலக் கட்டத்தில்,பிள்ளைகளுடன் பகிர்ந்துக்கொள்ள சில குறிப்புகள்:

வாசிப்புநேரம் -
சமூக ஊடகங்களைப் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டியவை

படம்: Pexels/Channel NewsAsia

நம்மில் பலர் சமூக ஊடகங்கங்களில் அதிக நேரம் செலவிடும் இக்காலக் கட்டத்தில்,பிள்ளைகளுடன் பகிர்ந்துக்கொள்ள சில குறிப்புகள்:

- காண்பதெல்லாம் உண்மையல்ல

சமூக ஊடகங்கங்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்கையின் ஒரு பக்கத்தைத்தான் காட்டுகிறார்கள். அதை மட்டுமே பார்த்துவிட்டு போலியான எதிர்பார்ப்புகள் உருவாக்குதல் கூடாது.

- கேட்கவேண்டிய கேள்விகள்

 சமூக ஊடகங்கங்களில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் இது உண்மையா? இது மற்றவர்களை பாதிக்குமா? இது ஏதாவது சர்ச்சயை உண்டாக்குமா? இதைச் சரியான காரணங்களுக்குதான் பகிர்ந்து கொள்கிறோமா? போன்ற கேள்விகளைக் கேட்கவேண்டும்.

- அகத்தில் முகம் பார்க்க முடியுமா?

நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசினால்தான் எதிரில் இருப்பவரின் உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ளலாம். வெறுமனே எழுத்து வடிவில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதால் சில வேளைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். எப்போதும் கவனம் அவசியம்.

- சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றால், சொல்ல வேண்டாம்

பகிர்ந்துகொள்ள சுவையான தகவல்கள் இல்லாவிட்டால், எதுவும் சொல்லாமல் இருப்பதே சிறப்பு. மற்றவர்களைத் துன்புறுத்தும் வகையில் பேசுவதில் பயனில்லை.

- இணையத்தில் எதுவுமே தனிப்பட்டது இல்லை

இணையத்தில் பகிர்ந்துகொண்ட பிறகு அது ஒருவருக்கு தனிப்பட்ட தகவலில்லை. எனவே, ஒன்றைப் பதிவதற்கு முன்னர் நன்கு சிந்தித்து செயல்படுவது அவசியம்.

- எப்போதும் இணையம் வேண்டாம். அவ்வப்போது இடைவேளை அவசியம்

எந்நேரமும் இணையத்தில் மூழ்கிக் கிடப்பது நல்லதல்ல. அவ்வப்போது இடைவேளை அவசியம். மனிதர்களை நேரில் பார்த்து உரையாடுவது மிக முக்கியம். அது உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சிதரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்