Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாசி லமாக்கைத் தனித்து அடையாளப்படுத்தி பிரபலப்படுத்த முயற்சி

மலேசியாவின் தேசிய உணவு என, 'நாசி லமாக்' வருணிக்கப்படுவதுண்டு.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் தேசிய உணவு என, 'நாசி லமாக்' வருணிக்கப்படுவதுண்டு.

தேங்காய்ப் பாலில் சமைக்கப்பட்ட சோறு..

வறுத்த நெத்திலி மீன்..

வெள்ளரிக்காய்த் துண்டுகள்..

பொரித்தெடுத்த வேர்க்கடலை..

முட்டை, சம்பால் அனைத்தும் அடங்கியது, நாசி லமாக்.

மலேசியாவில், அது கிடைக்காத இடமே இல்லை எனலாம்.

அந்த நாசி லமாக்கைத் தனித்து அடையாளப்படுத்தி பிரபலப்படுத்த, சிலர் முயன்று வருகின்றனர். 

அவற்றில் ஒருவர் ஜொஜி கமாரூடின்.

திருநங்கையான ஜொஜி கமாரூடினுக்கு பல பட்டப் பெயர்கள் உண்டு.

அவற்றுள் ஒன்று பொண்டான். 

மலாய் மொழியில், திருநங்கைகளை வருணிக்கப் பயன்படும் கொச்சையான ஒரு பெயர். 

தன்னைக் கிண்டல் செய்யப் பயன்படும் சொல்லையே, தன் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த முடிவெடுத்தார் ஜொஜி.

விளைவு ? "நாசி லமாக் பொண்டான்" பிறந்தது. 

'ஜொஜி நாசி லமாக்' என்று கடைக்குப் பெயர் வைத்தாலும் யார் அதைச் சொல்லிக் கூப்பிடப் போகிறார்கள் ? 

பொண்டான் நாசி லமாக் கடை எங்கே என்று தானே கேட்கப் போகிறார்கள் ?

"என் கடைக்கு அதுவே அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டுமே" என்கிறார் ஜொஜி. 

அவரது தன்னம்பிக்கை, பெருகிவரும் வியாபாரத்தில் தெரிகிறது.

அவரே எதிர்பாராத அளவுக்கு அமோகமான வியாபாரம்..

இதுபோல் பெயரில் வித்தியாசம் காட்டும் மற்ற சில நாசி லமாக் கடைகளும் உண்டு. 

'ஸ்பைடர்மேன் நாசி லமாக்' அவற்றுள் ஒன்று.

என்ன பெயரிட்டு அழைத்தாலும், கடைசியில் கடைக்குமுன் கூட்டத்தைக் கூட்டுவது என்னவோ, நாசி லமாக்கின் உண்மையான ருசிதான்.. 

அதை யாரும் மறுப்பதில்லை. பெயர் கவன ஈர்ப்புக்கு மட்டுமே என்கின்றனர் கடை உரிமையாளர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்