Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆப்பிள் கைத்தொலைபேசிக் கட்டணத் திட்டங்ளை வெளியிட்ட ஸ்டார்ஹப்

ஸ்டார்ஹப், ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைய வெளியீடுகளான iPhone 8iPhone 8 Plus ஆகியவற்றுக்கான கட்டணத் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஆப்பிள் கைத்தொலைபேசிக் கட்டணத் திட்டங்ளை வெளியிட்ட ஸ்டார்ஹப்

(படம் : Reuters)

ஸ்டார்ஹப், ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைய வெளியீடுகளான iPhone 8iPhone 8 Plus ஆகியவற்றுக்கான கட்டணத் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

போட்டி நிறுவனங்களான சிங்டெல்லையும் M1ஐயும் முந்திக்கொண்டது ஸ்டார்ஹப்.

iPhone X திறன்பேசியை வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியிடவிருப்பதாக ஸ்டார்ஹப் உறுதி செய்தது.

64GB தரவைக்கொண்ட iPhone 8 கைத்தொலைபேசித் திட்டத்திற்கான நேரடிக் கட்டணம் 606 வெள்ளியாகவும் மாதாந்திரக் கட்டணம் 48 வெள்ளியாகவும் உள்ளன.

iPhone 8க்குப் பதிலாக, அதே தரவைக் கொண்ட iPhone 8 Plus கைத்தொலைபேசித் திட்டத்திற்கான நேரடிக் கட்டணம் 750 வெள்ளியாகவும் மாதாந்திரக் கட்டணம் 48 வெள்ளியாகவும் உள்ளன.

கைத்தொலைபேசிக்கான முன்பதிவை வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை செய்யலாம்.

M1 அந்தத் தொலைபேசிகளுடன், ஆப்பிள் கடிகாரம் Series 3, ஆப்பிள் TV 4K ஆகியவற்றை அடுத்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனது கடைகளில் விற்பனையாகும் என தெரிவித்தது.

சிங்டெல், தனது கடைகளில் iPhone 8, iPhone 8 Plus ஆகிய கைத்தொலைபேசிகள் செப்டம்பர் 22இலிருந்து விற்பனைக்கு வரும். நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து iPhone X கடைகளில் கிடைக்கும். ஆயினும் அவற்றுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்