Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இதய நோய் அபாயத்தைக் குறைக்கக்கூடிய பருப்புவகைகள்

வால்நட், கடலை, பாதாம்பருப்பு ஆகியவை உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவை இதய நோய் ஏற்படும் அபாயத்தைப் பெருமளவு குறைப்பதாகக் கூறுகிறது, அண்மைய ஆய்வு ஒன்று. 

வாசிப்புநேரம் -

வால்நட், கடலை, பாதாம்பருப்பு ஆகியவை உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவை இதய நோய் ஏற்படும் அபாயத்தைப் பெருமளவு குறைப்பதாகக் கூறுகிறது, அண்மைய ஆய்வு ஒன்று.

பருப்பு வகைகளை உட்கொள்ளாதவர்களையும், உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

சுமார் 200,000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மருத்துவரீதியாக அவர்களுக்கு இருந்த பிரச்சினைகள், அவர்களது வாழ்க்கைமுறை, அன்றாட உணவுப் பழக்கம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாளொன்றுக்கு 28 கிராம் பருப்புவகைகளை, வாரத்துக்கு 5 முறை உட்கொண்டவர்களுக்கு, இதய நோய் ஏற்படும் அபாயம் 14 விழுக்காடு குறைவாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது.

இருப்பினும், உப்பு, இனிப்பு சேர்த்த பருப்புவகைகளையும், எண்ணெயில் வறுத்த பருப்புகளையும் அதிகமாக உட்கொள்வது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்