Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனிதனுடைய மோப்ப சக்தி நாம் நினைப்பதைவிட அதிகம்: ஆய்வு

நாய், சுண்டெலி, போன்ற உயிரினங்களைப் போல் மனிதர்களுக்கும், குறிப்பிடத்தக்க மோப்ப சக்தி இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

நாய், சுண்டெலி, போன்ற உயிரினங்களைப் போல் மனிதர்களுக்கும், குறிப்பிடத்தக்க மோப்ப சக்தி இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நியூஜெர்ஸியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் மெக்கன் என்பவர் மோப்ப சக்தி குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

மனிதர்களால் ஒரு டிரில்லியனுக்கும் மேற்பட்ட வாசனை வகைகளைப் பிரித்தறிய முடியும். 

பொதுவாகக் கூறுவதுபோல் அது 10,000 வகை வாசனை இல்லை என்கிறது ஆய்வு. 

மேலும் 1879ஆம் ஆண்டு விஞ்ஞானி புரோகா என்பவர் விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களின் வாசனை நுகரும் உறுப்புகள் சிறியவை என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் ஒரு வாசனைக்கு விலங்குகள் காட்டும் எதிர்வினை அளவுக்கு மனிதர்கள் எதிர்வினை ஆற்றுவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்