Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மருந்தை நேரத்திற்கு உட்கொள்கிறீர்களா? கண்காணிக்கும் புதிய மின்னிலக்க மாத்திரை

நோயாளிகள் மருந்தை நேரத்திற்கு உட்கொள்கிறார்களா? அதனைக் கண்காணிக்கும் புதிய மின்னிலக்க மாத்திரைக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி தந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

நோயாளிகள் மருந்தை நேரத்திற்கு உட்கொள்கிறார்களா? அதனைக் கண்காணிக்கும் புதிய மின்னிலக்க மாத்திரைக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி தந்துள்ளனர்.

சுகாதாரக் கவனிப்பும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மாத்திரை பிரதிபலிக்கிறது. மாத்திரையை அடையாளம் காணும் கருவி, அது குறித்த தகவலை நோயாளியின் திறன்பேசிச் செயலிக்கு அனுப்பும்.

நோயாளி மாத்திரை உட்கொள்வதை இந்த முறை கண்காணிக்கிறது.
மாத்திரைக்குள் உணர்கருவி இருக்கும். அதற்கு மின்கலன் ஏதும் இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் திரவத்தால் நனைக்கப்படும் மாத்திரை, சிறிதான மின்பொறியை உண்டாக்கும்.

நோயாளி அணிந்திருக்கும் கருவி மின்பொறி ஏற்பட்டுள்ளதை அறிந்து, அது பற்றிய தகவல்களைச் செயலிக்கு அனுப்பும். நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றால் பாதிப்படைவோருக்கு இந்தப் புதிய முறை பேருதவியாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்