Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இதய நோய், புகையிலை, ஆரோக்கியமற்ற உணவுமுறை - மோசமான உயிர்கொல்லிகள்

ஆயுட்காலம் அதிகரித்த போதிலும் மக்கள் அதிகக் காலம் நோயுற்று இருப்பதாக Lancet மருத்துவ சஞ்சிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இதய நோய், புகையிலை, ஆரோக்கியமற்ற உணவுமுறை - மோசமான உயிர்கொல்லிகள்

(படம் : Reuters)

உலகில் இதய நோய், புகையிலை ஆகியவை 2016ஆம் ஆண்டின் ஆக மோசமான உயிர்க்கொல்லிகளாகக் கருதப்படுகின்றன.

அதே வேளையில் மனநலப் பாதிப்பு, ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை மக்களிடையே ஆக மோசமான சுகாதாரக் கேடுகளாக அறியப்படுகின்றன. அனைத்துலக ஆய்வின் மூலம் அது கண்டறியப்பட்டுள்ளது.

ஆயுட்காலம் அதிகரித்த போதிலும் மக்கள் அதிகக் காலம் நோயுற்று இருப்பதாக Lancet மருத்துவ சஞ்சிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பணக்கார நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஏழை நாடுகளில் மக்கள் நோயுற்றிருக்கும் விகிதம் அதிகம். 

130 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் அந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த மரணங்களில் ஐந்தில் ஒரு மரணத்திற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறையே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

புகையிலையைப் புகைப்பதன் காரணமாக 7.1 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்