Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீங்கள்?

ஃபேஸ்புக்கை அன்றாடம் பயன்படுத்தும் 1.28 பில்லியன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். சமூக ஊடகத்தை மக்கள் இவ்வளவு விரும்புவதற்குக் காரணம் என்ன, இவர்களின் நோக்கம் என்ன?

வாசிப்புநேரம் -
ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீங்கள்?

படம்: REUTERS/Regis Duvignau

ஃபேஸ்புக்கை அன்றாடம் பயன்படுத்தும் 1.28 பில்லியன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். சமூக ஊடகத்தை மக்கள் இவ்வளவு விரும்புவதற்குக் காரணம் என்ன, இவர்களின் நோக்கம் என்ன?

இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற ஆராய்ச்சியைச் செய்துபார்க்க விரும்பினர், அமெரிக்காவின் ப்ரிகாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள்.

ஆய்வின் முடிவுகளைக் கொண்டு ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் 4 வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

அவர்களது ஆய்வு முடிவுகள் இதோ:

-உறவை வளர்ப்பவர்: இவர்கள் எப்போதும் எந்த ஒரு பதிவுக்கும் பதிலளிப்பார்கள், பதிவை வெளியிடவும் செய்வார்கள். இவர்களது ஒரே நோக்கம் உறவை வளர்க்கவேண்டும். இயல்பு வாழ்க்கையின் நீட்டிப்பாக சமூக ஊடகத்தைப் பார்ப்பவர்கள் இவர்கள்.

-அறிவிப்பாளர்கள்: இவர்களுக்கு பதிவுகள், படங்கள் எதையும் பகிர்வதில் ஆர்வம் இருக்காது. பெரும்பாலும், ஏதோவது ஒரு விவரம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும், தெரிவிக்கவேண்டும். இது மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருக்கும்.

-தம்மைப் பற்றிக் கூற விரும்புவர்கள்: இத்தகைய பயனீட்டாளர்கள் எப்போதும் படங்கள், காணொளிகள், கருத்துகள் வழி தம்மைப் பற்றி உலகுக்குத் தெரிவிப்பவர்கள். அடுத்தவரின் கவனத்தை ஈர்ப்பதிலேயே எப்போதும் கவனம் இருக்கும். தமது படங்களுக்கும், பதிவுகளுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் இவர்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தரும்.

-வேடிக்கை பார்ப்பவர்கள்: இவர்களால், சமூக ஊடகங்களிலிருந்து விலகவும் முடியாது. ஒட்டவும் முடியாது. வெளியில் இருந்துகொண்டு என்ன நடக்கிறதென்று மட்டும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நிஜ வாழ்க்கையில் வேடிக்கை பார்ப்பது போலவே எல்லாரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்