Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"பருமனாக இருந்தாலும் யோகா செய்வேன்"

யோகாசனங்களைச் செய்வதற்கு கட்டான உடல்வாகு இருக்கவேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு.

வாசிப்புநேரம் -
"பருமனாக இருந்தாலும் யோகா செய்வேன்"

(படம்: AFP)

யோகாசனங்களைச் செய்வதற்கு கட்டான உடல்வாகு இருக்கவேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு. அத்தகையோருக்குச் சவால் விடுக்கும் விதத்தில் வந்திருக்கிறார் 34 வயது டோலி சிங்.

டோலி, தாம் யோகாசனங்களைச் செய்வதைக் காட்டும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார்.

அந்தக் காணொளிகள் அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
பலர் டோலியைப் பாராட்டினாலும் சிலர் புண்படும் சொற்களையும் எழுதுவதுண்டு.

அவற்றைத் தாம் பொருட்படுத்துவதில்லை என்கிறார் டோலி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், காலில் சுளுக்கு ஏற்பட்டபோது உடல் எடையைக் குறைக்கவேண்டும் என மருத்துவர் ஒருவர் டோலிக்கு ஆலோசனை தெரிவித்தார்.

150 செ.மீ உயரமுள்ள டோலியின் அப்போதைய உடல்எடை 90கிலோகிராம்.
யோகாசன ஆசிரியர் ஒருவரின் மெலிந்த தோற்றத்தைத் கண்டபிறகு அந்தக் கலையைக் கற்றுக்கொள்ள முடிவெடுத்தார் டோலி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்