Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அடிக்கடி சளிக்காய்ச்சல் வருபவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் அதிகம்

சளிக்காய்ச்சல், நுரையீரல் அழற்சி, நிமோனியாக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 17 மடங்கு வரை அதிகரிக்கிறது.

வாசிப்புநேரம் -
அடிக்கடி சளிக்காய்ச்சல் வருபவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் அதிகம்

(படம்: Thinkstock)

சளிக்காய்ச்சல், நுரையீரல் அழற்சி, நிமோனியாக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 17 மடங்கு வரை அதிகரிக்கிறது.

கிருமி தொற்றிய சில நாட்களில் அல்லது வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக ஆய்வொன்று கூறுகிறது.

மாரடைப்பு வந்த 578 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 17 விழுக்காட்டினருக்குச் சளிக்காய்ச்சல் வந்த ஒரு வாரத்திலும் 21 விழுக்காட்டினருக்கு ஒரு மாதத்திலும் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சளிக்காய்ச்சல் ஏற்படும்போது ரத்தம் உறைந்துபோகும் சாத்தியம் அதிகம். அத்துடன் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சியும் மாரடைப்பில் கொண்டுபோய் விடலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

மாரடைப்புக்கான அறிகுறி தென்பட்டால் அதைப் புறக்கணிக்கக் கூடாது.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, கை வலி, மயக்கம், வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்